×

ஆலந்தூர், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உரிமமின்றி நடத்திய 20 கடைகளுக்கு சீல்: வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு

ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டலம் 163வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் உரிமமின்றி  46  கடைகள் செயல்படுவது  தெரியவந்தது. இந்த கடைகளுக்கு  மாநகராட்சி வருவாய்துறையினர்  நோட்டீஸ் அனுப்பினர். அதில், 2 நாட்களுக்குள் வரி செலுத்தவேண்டும் என  குறிப்பிட்டிருந்தனர்.  ஆனால் யாரும் வரி செலுத்தவில்லை.இதையடுத்து மாநகராட்சி மண்டல உதவி வருவாய் அலுவலர் யுகமணி தலைமையில் வரி மதிப்பீட்டாளர்கள் போலீசார் உதவியுடன் மேற்கண்ட  கடைகளுக்கு நேற்று சீல் வைக்க வந்தனர். முதல்கட்டமாக 10 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதம்பாக்கம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், வியாபாரிகள் சங்க  நிர்வாகிகள், ஆலந்தூர் திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசனை சந்தித்து பேசினர்.

அவர், அதிகாரிகளை தொடர்புகொண்டு, கடைகளுக்கு உரிமம் பெற 2 நாள் கால அவகாசம் கேட்டார்.  இதனால் மீதமுள்ள கடைகளுக்கு சீல்  வைக்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.„ இதேபோல் சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை பகுதிகளில் உள்ள  வணிக வளாகங்களில் உரிமம் இன்றி கடைகள் இயங்கி வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு  தொழில் உரிமம் பெற நோட்டீஸ் கொடுக்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், யாரும் தொழில் உரிமம் பெறவில்லை. இதனால், மண்டல உதவி ஆணையர் சுகுமார், உதவி வருவாய் அலுவலர் பிரதீப் குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் மாநகராட்சி வருவாய் துறை,  மின்துறை, துப்புரவு ஆய்வாளர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் நேற்று சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று 10 கடைகளுக்கு சீல் வைத்தனர்.


Tags : shops ,Alandur ,zones ,Cholinganallur ,merchants , Alandur ,Cholinganallur ,zones, merchants protest
× RELATED நங்கநல்லூர் வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு