×

அமெரிக்க படை மீது ராக்கெட் தாக்குதல்

பாக்தாத்: ஈராக்கில் அமெரிக்க ராணுவ முகாம் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.ஈராக்  தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து படையினர் தாஜி என்ற இடத்தில் தங்கியுள்ள முகாம் மீது கடந்த 11ம் தேதி ஈரான் ஆதரவு  தீவிரவாதிகள் ராக்ெகட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில்,  அமெரிக்காவின் 2 வீரர்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதற்கு  பதிலடியாக அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் நடத்திய விமானத் தாக்குதலில் 5 ஈராக்  வீரர்கள், பொதுமக்களில் ஒருவர் உள்பட 6 பேர்  பலியாயினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவத்தின் தாஜி முகாம் மீது நேற்று 15க்கும் மேற்பட்ட சிறிய ரக ராக்கெட்டுகளை வீசி  தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஈராக் ராணுவ அதிகாரிகள்  உறுதிப்படுத்தினர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள்  குறித்து இதுவரை எந்த  தகவலும் வெளியாகவில்லை.

Tags : Rocket attack ,US , Rocket ,attack ,US force
× RELATED ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தின்...