×

உலகின் பெரும் பணக்காரர்களை தாக்கிய கொரோனா: ஜெஃப் பெசோஸ், பெர்னாடு அர்னால்ட் பல கோடி சொத்துகள் காலி...முகேஷ் அம்பானி 2-ம் இடத்திறகு தள்ளப்பட்டார்

வாஷிங்டன்: சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா  வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பீதியால், பல்வேறு நாடுகள் பயண  கட்டுப்பாடுகளை விதித்தன. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உலக  கோடீஸ்வரர்கள் ஒரே நாளில் 78 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை இழந்துள்ளனர்.

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை இழந்தார். இதேபோல் French luxury conglomerate தலைவர் பெர்னாடு  அர்னால்ட், 7.7 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை இழந்துள்ளார். உலகின் மூன்றாவது பணக்காரரான பெர்னாடு அர்னால்டின் LVMH நிறுவன பங்குகள் 9 சதவிகிதம் குறைந்ததால் இந்த இழப்பு ஏற்பட்டது. பங்குச் சந்தை சரிவின்  காரணமாக, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், 6.98 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்- தனது சொத்து மதிப்பில் 9 சதவிகிதத்தை இழந்துள்ளார். இதேபோல், ஓரக்கிள் நிறுவனர் லாரி எலிசன், ​ கூகுள் நிறுவனர்கள் லாரி பெய்ஜ், சர்ஜ பிரின், Sergey Brin டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் ஆகியோரும் கணிசமான அளவில் தங்களது சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆசிய அளவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 42 ஆயிரம் கோடி ரூபாய் சரிந்து 3,29,000 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதன்மூலம்,  பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Tags : world ,Corona ,Jeff Bezos ,Mukesh Ambani ,Bernadette Arnold , Corona attacking the world's richest people: Jeff Bezos Mukesh Ambani dumped into multi-crore assets
× RELATED உலகின் அதிக வயதான யூடியூப் கேமர் என்ற பட்டத்தைத் தட்டி கின்னஸ் சாதனை!