×

வேலூர் மாநகராட்சி பூங்காவில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்: ஆய்வு செய்த அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் மாநகராட்சி, சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதிக்குட்பட்ட திருவிக நகரில் கடந்த 2017ம் ஆண்டு அம்ரூத் திட்டத்தின் கீழ் ₹68 லட்சம் மதிப்பில் பூங்கா கட்டப்பட்டது. இந்த பூங்காவை சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ‘பூங்காவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவிக நகரை சேர்ந்த மக்கள், மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் மனு அளித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட பூங்காவில் ஆய்வு நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாநகராட்சி 2வது மண்டலம் உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து உதவி கமிஷனர் மதிவாணன் கூறுகையில், ‘திருவிக நகர் பூங்காவில் குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் இல்லை’ என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பூங்காவில் உள்ள வாட்டர் ஸ்ப்ரீங் ஆகியன பழுதாகி இருப்பது கண்டறியப்பட்டது.

ஒரு வாரத்திற்குள் அவைகளை மாற்றியமைக்கப்படும். இதேபோல் சிறிய குறைபாடுகள் உடனடியாக களைய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிறுவர்களுக்கு மட்டுமே பூங்காவில் விளையாட்டு பொருட்கள் இருக்கிறது. பெரியவர்கள் அதிகளவில் நடைபயிற்சி செய்வதால், உடற்பயிற்சி செய்யும் உபகரணங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : inspection officials ,Vellore Corporation Park ,inspection ,Vellore , Vellore, park, inspection, officers
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...