×

கொரோனா ‘ஜோக்’ சொன்ன வீரருக்கு ‘கொரோனா’: ஐயோ... என்ன மன்னிச்சிடுங்க மக்களே..!மருத்துவமனையில் படுத்துக் கொண்டு அலறல்

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து வீரர் ரூடி கோபர்ட் (27) தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், ‘கொரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பு எச்சரிக்கைகளை புறக்கணிக்கிறேன். இதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை’ என்று தெரிவித்தார். மேலும், கோபர்ட் சமூக ஊடகங்களில் கொரோனா குறித்து அவதூறுகளை பரப்புவதாக கண்டனங்கள் எழுந்தன. திடீர் திருப்பமாக, பதிவு வெளியிட்ட சில மணி நேரங்களில் ரூடி கோபர்ட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக செய்திகள் வௌியாகின.
ஓக்லஹோமா நகரத்தில் விளையாட திட்டமிட்டிருந்த போட்டிக்கு முன்னதாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. கோபர்ட் தனது லாக்கர் அறையில், மற்ற வீரர்களையும் அவர்களின் உடமைகளையும் தொட்டதால் வைரஸ் பாதிப்புக்கு ஆளானதாக கூறப்படுகிறது. மற்றொரு வீரரான டொனோவன் மிட்செல்லுக்கு நோய் தொற்று இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டதால், அவர் மூலம் கோபர்ட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையில், கோபர்ட் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவ அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. நோயறிதலைக் கற்றுக்கொண்டதிலிருந்து பெரும் கவலை மற்றும் சங்கடத்திற்கு தள்ளப்பட்டுள்ேளன். முக்கிய விஷயம் என்னவென்றால், நான் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக உணர்கிறேன். கொேரானா விழிப்புணர்வு குறித்து நான் பதிவிட்ட பதிவுக்காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். அந்த நேரத்தில், நான் கூட பாதிக்கப்பட்டுள்ளேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் கவனக்குறைவாக இருந்தேன். எனது இந்த அனுபவம் ஒரு எச்சரிக்கையாகவும், இதை எல்லோரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவும் காரணமாகிறது என்று நம்புகிறேன். தொற்றுநோய்களின் அபாயங்கள் குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : player ,Corona ,Joka , Coronation of joke player What a sorry man ..!
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...