×

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து போட்டி: பந்து பொறுக்க விட்டுட்டாங்களே...வெறிச்சோடியது விளையாட்டு அரங்கம்

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சிட்னி மைதானம் ரசிகர்களின் ஆரவாரமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ரசிகர்கள் மைதானங்களில் இல்லாததால் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் சிக்சர்களை கேலரிக்குள் சென்று வீரர்களே எடுத்துவரும் நிலை ஏற்பட்டது. ஆனால் ரசிகர்கள் இருக்கும்போது பந்தை ரசிகர்களே பிடித்து மைதானத்திற்குள் வீசுவர். தற்போது வீரர்களே கேலரிக்குள் சென்று பந்தை எடுக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதனை வைத்து ரசிகர்கள் மீம்ஸ்களாக ஊடகங்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

‘இப்படியெல்லாம் ஒரு போட்டியை பார்க்க வேண்டியுள்ளது’, ‘தியேட்டர் போய் சினிமா பாக்கறத்துக்கும், ஆள் இல்லாத தியேட்டரில் சினிமா ஓட்டறத்துக்கும் என்ன வித்தியாசம்?‘ ‘ஏன் இப்படி உணர்ச்சியற்ற விளையாட்டை ஆடணும்?’ கொஞ்சம் நாள் சும்மாதான் இருங்களே!’ ‘பந்து எடுத்து போடகூட ஆள் இல்லாமல் நடத்தும் போட்டியால் யாருக்கு லாபம்?’ ‘ரசிகர்கள் இல்லையென்றால் வாழ்க்கை ரொம்ப கஷ்டமப்பா!’ என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி உள்ளனர். நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 71 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை நடைபெறுகிறது.

Tags : Tournament ,Australia ,New Zealand , Australia - New Zealand Tournament: Leave the ball unbeaten ...
× RELATED 2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா