×

சாலையோரத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் பீதி

பந்தலூர்: பந்தலூர் அருகே நெடுஞ்சாலை அருகில் தேயிலைத்தோட்டத்தில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து வருகின்றனர். பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதிகளில் இரவு முழுதும் பனியும் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலும் தொடர்வதால் வனப்பகுதியில் குடிநீர் ஆதாரங்கள் வற்றி வனப்பகுதி முழுதும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானை, காட்டுமாடு, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் குடியிருப்புகள், மற்றும் விவசாயத்தோட்டங்களில் நுழைந்து முகாமிட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், பந்தலூரில் இருந்து சேரம்பாடி மற்றும் கேரள மாநிலம் செல்லும் நெடுஞ்சாலை எலியாஸ் கடை அருகே நேற்று மதியம் போக்குவரத்து நிறைந்த நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று  நெடுஞ்சாலையில் குறுக்கிட்டு அருகே உள்ள டேன்டீ தேயிலைத்தோட்டம் பகுதியில் முகாமிட்டது. இதனால்  வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி யானையை செல்போனில் படம் எடுக்க குவிந்தனர்.

இதனால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்   யானை சில மணி நேரத்தில் வனப்பகுதிக்கு சென்றது.

Tags : motorists , Single elephant, motorists, panic
× RELATED வேலூரில் தற்போது 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்.:வாகன ஓட்டிகள் தவிப்பு