×

அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களுக்கு ரஜினி நன்றி

சென்னை: அரசியல் மாற்றம் பற்றிய தமது கருத்தை மக்களுக்கு தெரிவித்த ஊடகங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். மன்ற உறுப்பினர்கள், ரசிகர்களுக்கும் ட்விட்டரில் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்ற எனது கருத்து பாமர மக்களும் சிந்தித்து பேசுகின்ற நிலையை அடைந்துள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அரசியல் மாற்றத்துக்கு 3 திட்டங்கள் வைத்துள்ளேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2017க்கு முன் அரசியலுக்கு வருவதாக தான் ஒருபோதும் கூறியது இல்லை.

1996ல் இருந்தே அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடந்தால் நன்றாக இருக்காது. புதியவர்கள், இளைஞர்கள் கட்சிப் பதவிக்கு வருவதில்லை. அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான் வருகிறார்கள் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. முதலமைச்சர் பதவியை நான் எப்போதுமே நினைத்துப் பார்த்தது இல்லை, என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் என நான் சொன்னது பலவிதமாக வெளியே வந்தன; மாவட்ட செயலாளர்கள் மூலம் எதுவும் வெளியே வரவில்லை.

ஏமாற்றம் என நான் குறிப்பிட்டது என்ன என்பது குறித்தும் கட்சி குறித்த கண்ணோட்டம் பற்றியும் தெரிவிக்கவே இந்த சந்திப்பு. மேலும் அந்த அரசியல் மாற்றம் குறித்த திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்குமாறு ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டார். அரசியல் மாற்றம் இருந்தால் மட்டும் ஆட்சி மாற்றம் என்றும் அது இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில் தனது கருத்தை மக்களுக்கு தெரிவித்த ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Rajini ,public ,regime change ,journalists ,fans , Actor Rajinikanth, political change, regime change, Rajini thanks, journalists, fans
× RELATED ரஜினி பட வில்லனிடம் விவாகரத்து கேட்ட மனைவி