×

வேகமா ஓடுங்க... விலை குறைஞ்சிருக்கு!... ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31.472-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31.472-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.79 குறைந்து ரூ.4000-க்கு கீழ் சென்று ரூ.3,934-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.44.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, ஆபரண தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. முதன் முதலாக கடந்த ஜனவரி மாதத்தில் தான் ஆபரண தங்கம் சென்னையில் சவரன் 31,000ஐ தாண்டியது. ஜனவரி மாத துவக்கத்தில் தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு 1,280 உயர்ந்தது.

கடந்த மாதம் தங்கம் விலை நிலையாகவே ஏறுமுகத்துடன் காணப்பட்டது.  பின்னர், கடந்த 25ம் தேதி சவரனுக்கு 592 சரிந்தது. இதுபோல் கடந்த மாதம் 29ம் தேதி அதிகபட்சமாக சவரனுக்கு 624 குறைந்தது. பின்னர், கடந்த 4ம் தேதி 824, 6ம் தேதி 784 அதிகரித்தது. இந்நிலையில், இந்த வார துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த 11ம் தேதி 400 குறைந்தது.

கடந்த 6 நாட்களில் மொத்தம் 1,656 குறைந்துள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31.472-க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வரை நகை வியாபாரிகள் சங்க கவுரவ செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், ‘‘இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. எனவே, தங்கம் விலை சரிந்துள்ளது. சர்வதேச சந்தையிலும், ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) தங்கம் 1,550 டாலர் வரை சரிந்துள்ளது. மேலும் விலை குறைய வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.

Tags : jewelry buyers , Gold, silver, gold prices are down, gold prices, jewelry buyers are happy
× RELATED தங்கத்தில் விலை இன்று குறைந்ததால் நகை...