×

சாலையில் கரும்பு துண்டுகளை சுவைத்த ஒற்றை யானை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையோர வனப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் நோக்கி சென்றபோது ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் இருந்த கரும்புகள் சாலையில் விழுந்தன.

அதைப்பார்த்த ஒற்றை ஆண் யானை சாலையின் நடுவே நின்றபடி கரும்புத்துண்டுகளை சுவைத்து கொண்டு வெகுநேரம் நின்றது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து யானை நகரும் வரை நீண்டநேரம் சாலையில் காத்திருந்தனர். ஆனால், ஒற்றை யானை நகரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ஆசனூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அதன்பின் போக்குவரத்து சீரானது.


Tags : road , Road, cane strip, single elephant
× RELATED மின்வேலியில் சிக்கி யானை பலி