×

கொரோனா வைரஸ் பாதிப்பு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை நர்சரி பள்ளிகளுக்கும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பள்ளிகளுக்கு எல்கேஜி, யுகேஜி உள்பட 5ம் வகுப்பு வரையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்களை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு சில மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் தற்போது நர்சரி, தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜிதாமஸ்வைத்யன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து வகை பள்ளிகளிலும் செயல்படும் எல்கேஜி, யுகேஜி, பிரிகேஜி  வகுப்புகளில் படிக்கும் அனைத்து வகை குழந்தைகளும், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி, மாவட்டங்களில் எல்கேஜி, யுகேஜி, உள்பட 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வைரஸ் தடுப்பு தொடர்பான முன்னெச்சரிக்ைக நடவடிக்கை எடுக்கும் வகையில் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் ஆணையர் சிஜிதாமஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்பி நர்சரி, தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.



Tags : Coronavirus Vacation Vacation ,LKG ,coronavirus infection holidays ,UK , Coronavirus, Holidays ,LKG ,UK classes
× RELATED பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் இன்றைய சொத்து மதிப்பு பூஜ்யம்