×

தேர்தலில் வெற்றி பெற்று பாஜ சட்டப்பேரவைக்குள் நுழையும்: புதிய தலைவர் எல்.முருகன் பேட்டி

சென்னை:  தமிழக பாஜ புதிய தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவரை பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், உள்ளிட்டோர் வரவேற்றனர்.  

பின்னர் அவர் அளித்த பேட்டி:  பாஜ எப்போதும் நேர்மறையான அரசியலை தான் எடுத்து செல்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளோம். இன்னும் வர உள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவினர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக சட்டமன்றத்தில் இருப்பார்கள். பிரதான கட்சியாக பாஜ இருக்கும். 20ம் தேதியில் இருந்து உரக்க சொல்வோம், உண்மையை சொல்வோம் என்ற கோஷத்துடன் பேரணி தொடங்க உள்ளோம்.Tags : L. Murugan ,election ,assembly ,BJP ,Baja Legislative Assembly , election, Entering ,Baja Legislative, Assembly,
× RELATED பத்திரிகை துறையை பாதுகாக்க நடவடிக்கை...