×

ஒவ்வொரு அழைப்பிலும் லொக்லொக் இருமலால் சாமான்ய மக்களிடம் கொரோனா பீதி அதிகரிப்பு: கே.எஸ்.அழகிரி வேதனை

சென்னை: மத்திய  சுகாதார அமைச்சகம் இந்திய மக்களுக்கு கைப்பேசி வாயிலாக, ஒவ்வொரு அழைப்பிலும்  ‘லொக், லொக்.. என்ற இருமல் குரலோடு ஆங்கிலத்தில் செய்தியைப் பரப்பி, கொரோனா  பீதியை சாமான்ய மக்களிடம் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது’ என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேதனை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவை பொறுத்தவரை, இதுவரை அதிகாரப்பூர்வமாக 73 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 31,793 பேர், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களில் 1138 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். 72 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பியதில் அதில் 69 பேருக்கு, கொரோனா பாதிப்பிற்குண்டான அறிகுறிகள் இல்லையென்ற செய்தி சற்று ஆறுதல் தரக்கூடிய ஒன்று. இருவரது பரிசோதனை அறிக்கை இதுவரை வெளியிடப்படாமல் மர்மமாக உள்ளது.

இந்த உயிர்க்கொல்லி நோய் மிகத் தீவிரமாக பரவி வருவதை ஆளும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்டும். மத்திய சுகாதார அமைச்சகமோ, இந்திய மக்களுக்கு கைப்பேசி வாயிலாக, ஒவ்வொரு அழைப்பிலும் ‘லொக், லொக்..’ என்ற இருமல் குரலோடு ஆங்கிலத்தில் செய்தியைப் பரப்பி, இந்த பீதியை சாமான்ய மக்களிடம் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதை தவிர, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ அல்லது நேர்மறையான செய்திகளையோ மக்களிடத்திலே பரப்புரை செய்ய ஆளும் அரசுகள் முற்றிலும் தவறியுள்ளது. இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.இதுவரை, மாநிலம் முழுவதும், 300 படுக்கையறைகள் கொண்ட வார்டு மட்டுமே தயார் செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்திருப்பது, இந்த நோய் தாக்குதல் பற்றிய போதுமான அறிவை இந்த அரசு பெற்றிருக்கவில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுகிறேன். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் உங்கள் பகுதியில் யாருக்கேனும் தென்பட்டால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து, தேவையான மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யவும், உள்ளாட்சி அமைப்புகளோடு இணைந்து பணியாற்ற அன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,KS Alagiri ,Lokloc ,Lovelock Coughs The Common People Corona , Lovelock coughs, common people,KS Alagiri agony
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...