×

சபை நாகரிகம் குறித்து துரைமுருகன் விளக்கம்

சட்டப் பேரவையில் எரிசக்தி துறை மற்றும் ஆயத்தீர்வை மீதான மானியக் கோரிக்கை நேற்று நடந்தது. உறுப்பினர்கள் பலர் அதுகுறித்து கேள்வி எழுப்பி பேசினர். இதையடுத்து மாலை 3.30 மணி அளவில் அமைச்சர் தங்கமணி, உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அதற்கு பிறகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது:துரைமுருகன்: அமைச்சர் பேசும் போது கூறினார், 10வது முறையாக மானியக் கோரிக்கை மீது பேசுவதாக தெரிவித்தார். 10ஆண்டுகளாக அமைச்சராக இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா, யானையை கட்டி தீனி போடுவது போல. அமைச்சர் பேசும்போது எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பேச எழுந்தனர். ஆனால் அவர்களை நாங்கள் உட்கார சொன்னோம். அதன்படி அவர்கள் அமைதியாக இருந்தனர். இதுதான் அவை நாகரிகம். அதுபோல எங்கள் உறுப்பினர்கள் எழுந்து பேசும்போது அமைச்சர்கள் குறுக்கிடாமல் இருந்தால் அது நாகரிகமாக இருக்கும்.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது சில சந்தேகங்களின் பேரில் கேள்வி எழுப்புகின்றார்கள். அப்போது அதுகுறித்து உடனடியாக விளக்கம் அளித்தால்தான் ஊடங்களில் அது வெளியில் வரும். இல்லை என்றால் அது வெளியில் தெரியாமல் போகும். அதனால்தான் அமைச்சர்கள் உடனடியாக பதிலளிக்கின்றனர். துரைமுருகன்: உங்கள் ஆட்சியில் ஒரு திட்டத்தை செய்தோம், அதை செய்தோம், இதை செய்தோம் என்கிறீர்கள். ஆனால், நாங்கள் தொடங்கிய திட்டத்தை தான் நீங்கள் செய்தீர்கள். அதையும் நாங்கள் உடனடியாக சொன்னால்தான் ஊடகங்களில் வரும். அதனால் எங்களையும் பேச அனுமதியுங்கள். இந்நிலையில், மின்சாரத்துறையில் ₹1.33 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-15ம் ஆண்டில் வழங்கிய கொள்கை விளக்க குறிப்பில் எண்ணூர் அனல் மின் திட்டம் 2017ல் முடிவடையும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். அந்த திட்டம் என்ன ஆனது. அதேபோல உடன்குடி அனல்மின் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வந்தது. அந்த பணியை செய்ய பெல் நிறுவனம் டெண்டர் எடுத்தது. அதில் குளறுபடி ஏற்பட்டது. பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதை நாங்களே செய்வோம் என்றார். இப்போது அதே திட்டத்தை பெல் நிறுவனத்துக்கே கொடுத்துள்ளீர்கள்.

உடன்குடி திட்டம் கொண்டுவந்த போது அதன் மதிப்பீட்டுக்கும் இப்ேபாது அதன் மதிப்பீட்டுக்கும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதுதான் நீங்கள் செய்த சாதனையா?
நீங்கள் எந்த திட்டத்தையும் செய்யவில்லை. ஆனால், மின்சாரத்தில் மிகை மாநிலம் என்று கூறுகிறீர்கள்அமைச்சர் தங்கமணி: எங்கள் சாதனைகளை திசைதிருப்பவே இப்படி நீங்கள் பேசுகிறீர்கள். எண்ணூர் திட்டம் நஷ்டம் ஆகவில்லை. பெல் நிறுவனம் டெண்டர் எடுத்தும் அதை சரியாக செய்யவில்லை. அதனால்தான் காலதாமதம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மின் உற்பத்தி செய்ய ஆகும் செலவை விட, மக்கள் பயன்பாட்டுக்காக நாங்கள் விலை குறைத்து கொடுக்கிறோம். அதனால் நஷ்டம் வருகிறது. செலவு கூடுகிறது. இருப்பினும் நாங்கள் மின்சாரத்தின் விலையை உயர்த்தவில்லை. அதனால்தான் இப்படி குறைபாடுகள் உள்ளது.



Tags : Duraimurugan ,church , Concerning ,church ,civilization Duramurugan ,
× RELATED திசையன்விளை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி