×

அனைத்து மதுபான கடைகளும் 5 ஆண்டுகளில் மூடப்படும் என எங்கேயும் சொல்லவில்லை: அமைச்சர் தங்கமணி திடீர் அறிவிப்பு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றுதான் அதிமுக தேர்தல்  அறிக்கையில் கூறப்பட்டது. 5 ஆண்டுகளில் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று  எங்கேயும் சொல்லவில்லை என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.கன்னியாகுமரி ஆஸ்டின் (திமுக): 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் படிப்படியாக தமிழகத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்று மக்களிடம் சொல்லிதான் ஆட்சிக்கு வந்தீர்கள். 4 ஆண்டு முடிந்து விட்டது. இன்னும் ஒரு ஆண்டில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு விடுமா?அமைச்சர் தங்கமணி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றுதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. 5 ஆண்டுகளில் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று எங்கேயும் சொல்லவில்லை. திடீரென மதுபான கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உள்ளே வந்துவிடும்.முதல்வர் எடப்பாடி: தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்றபோது படிப்படியாக தான் எல்லாமே செய்ய முடியும். குறிப்பிட்ட காலத்திலேயே எல்லாவற்றையும் செய்திட முடியாது. கள்ளச்சாராயம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், அரசு கவனமாக இருந்து அதை பின்பற்றி படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும்.

ஒட்டன்சத்திரம் சக்கரபாணி (திமுக): திமுக ஆட்சி காலத்தில் பல லட்சம் ஏழை விவசாயிகளுக்கு நிலம் கொடுக்கப்பட்டது. 60 வயதான தாய்மார்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று 2011ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. சென்னையை தவிர எந்த மாவட்டத்திலும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.
ஆஸ்டின்: கலைஞர் ஆட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. அமைச்சர் தங்கமணி: ஜெயலலிதா ஆட்சியில்தான் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது.ஆஸ்டின்: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின்திட்டத்தில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கிடைக்கவில்லை. 4.25 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள். டெல்டா பகுதிகள் பாதுகாப்பு சிறப்பு மண்டலமாக அறிவித்த சட்டத்தில் பலகுறைகள் உள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டத்திற்கு எந்த தடையும் இல்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா, அதையும் தடை செய்யுங்கள். நீதிமன்றம் போனால் போகட்டும்.முதல்வர் எடப்பாடி: டெல்டா விவசாயிகளுக்கு முழுமையான சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் எந்த ஓட்டையும் இல்லை.


Tags : Thangamani ,announcement ,liquor stores , state,liquor stores,Minister Thangamani,
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...