×

50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள்: அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவையில் நேற்று எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் தங்கமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
* சூரிய மின்னாற்றலை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் 2020-21ம் ஆண்டில் 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மேற்கூரை அமைப்புகள்  ₹250 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.     
* இந்த ஆண்டு, 50,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். இதில், 25,000 விண்ணப்பதாரர்களுக்கு விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின்னிணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம்  விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். மேலும், 25,000 விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண வரிசை முன்னுரிமை, சுயநிதி திட்டம் மற்றும் அரசு திட்டங்களின் மூலம் இலவச விவசாய மின் இணைப்பு
வழங்கப்படும்.      
* மின்னணு முறையில் பணம் செலுத்தினால்  வீட்டு வாசலிலேயே வசூல் என்ற கூடுதல் வசதி  ₹1.75 கோடி மதிப்பீட்டிலும் ₹0.20 கோடி வருடாந்திர செலவிலும் அறிமுகப்படுத்தப்படும்.
* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) எனும் புதிய பணியிடம் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற மேற்காண் பணியிடத்திற்கான  உடற்தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மார்ச் மாத இறுதியில்  எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணி நியமனத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 5000 பணியிடங்களின் எண்ணிக்கை 10,000-ஆக உயர்த்தப்படும்.      
* தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை,  சென்னை போக்குவரத்துத்துறையுடன் இணைந்து, ₹7.4 இலட்சம் மதிப்பீட்டில் சென்னை நகரில் தற்போதுள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை  சேமிப்புடன் கூடிய சூரிய மின் நிலையம்  மூலம்  இயக்குவதற்கு தேவையான முயற்சிகளை படிப்படியாக  மேற்கொள்ளும்.     
* மின் ஆய்வுத் துறையில் இளநிலை மின் ஆய்வாளர் நிலையில் ஆண்டொன்றிற்கு ₹90.48 லட்சம் தொடர் செலவினத்தில், 20 பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்.         
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : announcement ,Minister , 50,000 new, free agricultural ,power lines,
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...