×

சட்டப்பேரவை துளிகள்....

வகுப்பறைகள், ஆய்வகம், கணினி உபகரணங்கள் வாங்க 150 கோடி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது:
* தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பொறியியல் கல்லூரி மற்றும் 45 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் உள்ள கட்டிடங்களை மேம்படுத்தவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், முதல்கட்டமாக இந்த ஆண்டு ₹25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் 10 ஆயிரம் மாணாக்கர்கள், தொழிலகங்களில் கள அனுபவம் பெற்று, தங்கள் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக் கொள்ள ஒரு மாணாக்கருக்கு 16 ஆயிரத்து 600 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்க, ₹16 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
* 1840ம் ஆண்டு துவங்கப்பட்டு, தேசிய கல்லூரிகள் கட்டமைப்பில், நாட்டிலேயே 3ம் இடத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த சென்னை, மாநில கல்லூரி ₹10 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து பாதுகாக்கப்படும்.
* பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணாக்கர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் வகையில், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகத்துக்கு தலா ₹35 கோடி வீதம், மொத்தம் ₹210 கோடி நிதி வழங்கப்படும்.
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டவும், கணினி மற்றும் உபகரணங்கள் மற்றும் மர தளவாடங்கள் வாங்கவும் ₹150 கோடி வழங்கப்படும்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில்`விலங்குகள் உலாவிட உலகம்’
முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110வது விதியின் கீழ்  அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது:
* ெசன்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களை மிக அருகில் காணும் வகையில், ‘விலங்குகள் உலாவிட உலகம்’ ₹11 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
* திண்டுக்கல் சிறுமலை காப்புக்காடு, அழிந்துவரும் தேவாங்கு இனத்தின் பிறப்பிடமாக உள்ளதால், தேவாங்கை பாதுகாக்கவும், காட்டு மாடு, கடமான், சாம்பல் நிற கரடி, ஆசிய புனுகு பூனை, காட்டு பூனை ஆகியவற்றுடன், வங்கப் புலி, புள்ளிமான், சதுப்பு நில முதலை, மயில், வெளிமான், நெருப்புக் கோழி, இந்திய மலைப் பாம்பு, சாரைப் பாம்பு, நல்ல பாம்பு, மலேசிய மலை பாம்பு, குள்ளநரி, வங்க நரி ஆகியவை கொண்டு வரப்பட்டு, அவ்விலங்குகளுக்கு இருப்பிடங்கள், மருத்துவ வசதிகள், உணவு வழங்கும் இடம், தீவனத் தோட்டம், பூங்கா மற்றும் பார்வையாளர் வசதி ஆகியவை கொண்ட ‘சிறு வன உயிரின பூங்கா’ 40 ஹெக்டேர் பரப்பளவில் ₹10 கோடி செலவில் உருவாக்கப்படும்.
* யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க, தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் எக்கு கம்பிகளுடன் கூடிய சிமென்ட் கான்கிரீட் தூண்களை நிறுவி, 5 அடுக்கு கம்பிவேலிகள் 60 கி.மீ. தூரத்திற்கு ₹21 கோடி செலவில் அமைக்கப்படும்.
* திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில், சுமார் 7 ஏக்கர் 76 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள சூரியகுளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, சுமார் ₹6.50 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சர் தங்கமணி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
 * கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபானத் தொழிலில்  ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு ₹5 கோடி மானியமாக மறுவாழ்வு  நிதி வழங்கப்படும்.
 *  போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகளை பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும், மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர்- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்று மதுபான பாட்டில்களில் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள ₹3.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.
 * டாஸ்மாக்கில் 6,913 மேற்பார்வையாளர்கள், 15,347 விற்பனையாளர்கள் மற்றும் 3,437 உதவி விற்பனையாளர்கள் ஆக மொத்தம் 25,697 சில்லறை விற்பனைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.  இவர்களுக்கு 2011ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் தொகுப்பு ஊதியமானது உயர்த்தி வழங்கப்பட்டது.  இந்த ஆண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் ₹500 கூடுதலாக ஏப்ரல், 2020 முதல் உயர்த்தி வழங்கப்படும்.  இதற்காக ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ₹15.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
 * போதைப் பொருள் குற்றவாளிகள் மீண்டும் அத்தொழிலுக்கு திரும்பாமல் இருக்க அவர்களது  மறுவாழ்விற்கு இந்த ஆண்டு ₹25லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
 * மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள ₹25லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில்49 கோடி செலவில் கேமரா வசதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110வது விதியின் கீழ்அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது:
* வரும் கல்வி ஆண்டில், ₹5 கோடியே 72 லட்சம் செலவில் 25 புதிய அரசு தொடக்க பள்ளிகள் துவங்கப்படும். மேலும், 10 அரசு தொடக்க பள்ளிகள் ₹3 கோடியே 90 லட்சம் செலவில் நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
* 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.  உட்கட்டமைப்பு வசதிகள் ₹55 கோடியே 50 லட்சம்  செலவிலும், தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ₹21 கோடியே 36 லட்சம் செலவிலும் ஏற்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் முதற்கட்டமாக, 1,890 அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் மீதமுள்ள 4,282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ₹48 கோடியே 73 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்து தரப்படும்.  
* தடகளம், கையுந்து பந்து, கால்பந்து மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கிலும், வளைகோல் பந்து விளையாட்டுக்கு மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கிலும், நீச்சல் விளையாட்டுக்கு வேளச்சேரி நீச்சல்குள வளாகத்திலும் உயர் செயல்திறன் அகாடமி, ₹3.89 கோடியில் ஏற்படுத்தப்படும்.



Tags : Lawyer , Lawyer, drops….
× RELATED இந்திய வழக்கறிஞருக்கு விருது