×

தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் 4 ஆண்டுகளில் 88 பேர் மரணம்: ஐகோர்ட் கிளையில் சுகாதாரத்துறை பதில் மனு

மதுரை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் கடந்த 4 ஆண்டுகளில் 88 பேர், மரணமடைந்துள்ளதாக ஐகோர்ட் கிளையில் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் கொசுக்களால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. கொசு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகளில் தற்காலிக ஊழியர்களே ஈடுபட்டுள்ளனர். தற்காலிக ஊழியர்கள் பணி போதுமான அளவுக்கு இல்லை. கொசுக்களை கட்டுப்படுத்தும் முன்ெனச்சரிக்கை பணிகளில், ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படவில்லை. தற்போதைய நடவடிக்கையால் எந்தவித பலனும் ஏற்படவில்லை.

 எனவே, கொசு ஒழிப்பு பணியில் நவீன தொழில்நுட்பத்தை போர்க்கால அடிப்படையில் பயன்படுத்த வேண்டியது அவசியம். தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் நிரந்தர ஊழியர்களை ஈடுபடுத்தவும், இதற்கு நவீன முறையிலான இயந்திரங்களை பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன் ேநற்று விசாரணைக்கு வந்தது. சுகாதாரத்துறை செயலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘கொசு ஒழிப்பு பணி துரிதமாக நடக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் முறையாக கண்காணிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் தனி வார்டு வசதி உள்ளது. முறையான பரிசோதனைகள் நடக்கிறது. தமிழகம் முழுவதும் போதுமான அளவுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. பள்ளிகளிலும், பொதுமக்கள் கூடுமிடங்களிலும் தினசரி வழங்கப்படுகிறது. 2016ம் ஆண்டு முதல் தற்ேபாதைய பிப்ரவரி மாதம் வரையில் சுமார் 40 ஆயிரம் பேர் டெங்குவால் பாதித்துள்ளனர். 88 பேர் இறந்துள்ளனர். போதுமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’’ என கூறப்பட்டிருந்தது.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரும் நிவாரணத்தை தர முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.Tags : deaths ,Icort Branch , Petition ,Health, Icort Branch
× RELATED கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய...