×

கோடை சீசனை முன்னிட்டு குன்னூர்-ஊட்டி இடையே ஏப்.1 முதல் சிறப்பு ரயில் இயக்கம்

குன்னூர்: தென்னக ரயில்வே சேலம் கோட்ட  மேலாளர் சுப்பாராவ் நேற்று குன்னூர் அருேகயுள்ள ரன்னிமேடு ரயில் நிலையத்தை  ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்துவரும் மேம்பாட்டு பணி குறித்து  கேட்டறிந்தார். பின்னர் சுப்பாராவ்,  நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மலை  ரயில் மூலம் இந்த நிதியாண்டில் ஜனவரி வரை ₹6.8 கோடி வருமானம்  கிடைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ₹12 கோடி வருமானம் ஈட்ட  திட்டமிட்டப்பட்டுள்ளது. கோடை சீசனை முன்னிட்டு குன்னூர்-ஊட்டி இடையே  ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட  உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை, சேலம்  உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருமுறை கிருமிநாசினி தெளித்து  சுத்தப்படுத்தப்படுகிறது. நீலகிரி மலை ரயிலில் நாளை (இன்று) முதல் இரு முறை  சுழற்சி அடிப்படையில் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நோய் பாதிப்புள்ளவர்கள் மலை ரயிலில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.



Tags : Coonoor ,Ooty ,Special Train Service , anticipation , summer season, April 1
× RELATED நீலகிரி அதிமுக அலுவலகம், வேட்பாளர் காரில் சோதனை