×

சிவகாசி பட்டாசு ஆலைகளில் இரண்டாம் நாளாக சிபிஐ ஆய்வு

சிவகாசி: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் கோபால், விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருளான பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தி, பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிவகாசியிலுள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து 6 வாரத்தில் அறிக்கை தாக்க செய்யவேண்டும் என சி.பி.ஐ. கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது.இதன்படி 17 சிபிஐ அதிகாரிகள் 7 குழுக்களாக பிரிந்து, சிவகாசியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் (பேரியம் நைட்ரேட்) பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

இரண்டாம் நாளாக, நேற்றும் சிவகாசி, தாயில்பட்டி, சூரார்பட்டி பகுதிகளில் ஆய்வு செய்தனர். கடந்த 4 ஆண்டுகளில் வாங்கப்பட்ட மூலப்பொருள்களுக்கான பில், பட்டாசு விற்பனைக்கான பில்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். பட்டாசு விற்பனையாளர்கள் கடையை மூடி விட்டு சென்றதால், சிவகாசியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Tags : CBI ,Sivakasi ,Sivakasi Fireworks Plant , Sivakasi, Fireworks Plant, CBI study
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...