×

மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாஸ்க்

மதுரை: கொரோனா வைரஸ் நோய் தாக்கம் உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏராளமானோர் பாதிப்புக்குளாகி பலியாகி உள்ளனர். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு காய்ச்சல், சளி பாதிப்புடன் வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல அறிவுறுத்தும்படி கோயில் ஊழியர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இதேபோல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு பின்னர்  கோயிலில் உள்ள கோபுரங்களின் அழகை கண்டு வியந்தனர். அப்போது நோய் தொற்று காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தபடி வந்தனர்.Tags : devotees ,Meenakshiamman Temple ,Meenakshiman , Mask ,devotees ,Meenakshiman temple
× RELATED பக்தர்கள் இல்லாமல் திருவில்லி. ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம்