×

ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

சிட்னி: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 71 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் வார்னர் 67 ரன், கேப்டன் பிஞ்ச் 60 ரன் விளாச, லாபுஷேன் 56, மிட்செல் மார்ஷ் 27 ரன் எடுத்தனர். கம்மின்ஸ் 14, ஸ்டார்க் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.நியூசிலாந்து பந்துவீச்சில் ஈஷ் சோதி 3, சான்ட்னர், பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 41 ஓவரில் 187 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கப்தில் 40, லாதம் 38, கிராண்ட்ஹோம் 25, கேப்டன் வில்லியம்சன் 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஈஷ் சோதி 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ் தலா 3, ஹேசல்வுட், ஸம்பா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆஸி. அணி 71 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை நடைபெறுகிறது.

* கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கிய நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த கட்ட சுடர் ஓட்ட நிகழ்ச்சிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அந்நாட்டு ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
*  இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* பஹ்ரைன், வியட்நாம் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


Tags : Australia ,match ,ODI ,ODI match , Australia, ODI match
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...