×

ஐஎஸ்எல் பைனலில் இன்று சென்னை - கொல்கத்தா மோதல்

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை - கொல்கத்தா அணிகள் இன்று இறுதிப் போட்டியில் மோதுகின்றன. ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 6வது தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று கோவாவில் நடைபெறும் இறுதிப் போட்டியில்  சென்னையின் எப்சி - அத்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இதுவரை நடந்த 6 தொடர்களில் இந்த 2 அணிகளும் தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. அதிலும் முதல் 4 தொடர்களில் கொல்கத்தா, சென்னை அணிகள் மாறி,மாறி சாம்பியனாகின. கடந்த முறை பெங்களூரு சாம்பியன் பட்டம் வென்றது. இன்றைய பைனலில் வென்று 3வது முறையாக கோப்பையை முத்தமிட இரு அணிகளும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Tags : Kolkata ,clash ,Chennai ,final ,ISL , ISL Final, Chennai, Kolkata
× RELATED சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில்...