×

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3 கேலரிகளுக்கு அனுமதி

சென்னை: சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்த ஐ,ஜே,கே கேலரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த 3 கேலரிகளில் 8 ஆண்டுகளாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், மாநகராட்சி மண்டல அலுவலர் ரவிகுமார் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டிஎன்சிஏ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் இருக்கை வசதி 26,000த்தில் இருந்து 38,000 ஆக அதிகரித்துள்ளது.


Tags : galleries ,Chepauk Stadium ,Gallery , Chepauk Stadium,3 galleries
× RELATED முதல்வர் அறிவித்து இரண்டு ஆண்டாச்சு...