×

டெல்லி சட்டப் பேரவையில் என்ஆர்சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது: பா.ஜ எம்எல்ஏக்கள் எதிர்ப்பு

புதுடெல்லி: தேசிய மக்கள்தொகை பதிவு, தேசிய குடிமக்கள் பதிவுக்கு எதிராக  டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது.கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவு (என்பிஆர்) போன்றவை குறித்து ஆலோசிப்பதற்காக, டெல்லி சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்பு கூட்டத்தை ஆம் ஆத்மி அரசு நேற்று கூட்டியது. நேற்று காலை பேரவை  தொடங்கியதும், தேசிய மக்கள்தொகை பதிவு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் எனும் தீர்மானத்தை சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் முன் மொழிந்தார். என்பிஆர்.ரை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்திய அவர், தவிர்க்க இயலாத பட்சத்தில் அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், 2010ம் ஆண்டு நடைமுறைகளை பின்பற்றியே அமல்படுத்த வேண்டும் என்றார்.

இந்த தீர்மானத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழி மொழிந்தார். அப்போது அவையில் உள்ள 70 எம்எல்ஏக்களில் எத்தனை பேரிடம் பிறப்பு சான்று உள்ளது என கை உயர்த்த அவர் கோரியதில், 9 பா.ஜ எம்எல்ஏக்கள் மட்டுமே கை உயர்த்தினர். பின்னர், அமோக ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.


Tags : assembly ,protest ,Delhi ,NRC ,BJP ,Delhi Legislative Assembly , Delhi Assembly, NRC, BJP MLAs
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து...