×

மாதவரம் பகுதியில் உரிமமின்றி இயங்கிய 19 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

திருவொற்றியூர்: மாதவரம் பகுதியில் உரிமம் இல்லாமல் இயங்கிய 19 கடைகளுக்கு  மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் செல்பட்டு வருகின்றன. இவற்றில் பல கடைகள், வணிக நிறுவனங்கள் முறையாக தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி செலுத்தாததால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, மண்டலம் வாரியாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  அதன்படி நேற்று முன்தினம் அயனாவரம், கொளத்தூர் பெரவள்ளூர்,  ெசம்பியம் ஆகிய பகுதிகளில் தொழில் உரிமம் இல்லாமல் நடத்தப்பட்ட 22  கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதை தொடர்ந்து, மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம்  இல்லாமல் கடைகள் நடத்தப்படுவதாக  மண்டல உதவி ஆணையர் தேவேந்திரனுக்கு  புகார்கள் வந்தன. இதையடுத்து உதவி வருவாய் அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் வருவாய் பிரிவு உரிமம் ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் நேற்று காலை மாதவரம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மணலி காமராஜர் சாலை, சின்னசேக்காடு பொன்னியம்மன்மேடு, மாதவரம் நெடுஞ்சாலை போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில்   சோதனையிட்ட போது உரிமம் இல்லாமலும், ஏற்கனவே உள்ள உரிமத்தை புதுப்பிக்காமல், வரி செலுத்தாமலும் 19 கடைகள் செயல்படுவது தெரிந்தது.  இதையடுத்து, அந்த கடைகளை  பூட்டி சீல் வைத்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Tags : shops ,Corporation ,area ,Madhavaram , Monthly, 19 stores, sealed, corporation
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி