×

நெதர்லாந்து நாட்டில் இருந்து கல்லூரி மாணவனுக்கு வந்த பார்சலில் 40 லட்சம் போதை மாத்திரைகள்: நைசாக பேசி சுற்றிவளைத்த சுங்க அதிகாரிகள்

சென்னை:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி தணிகாவை, தனிப்படை போலீசார் காசியில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.கோயில் நகரமாகவும், பட்டு நகரமாகவும், சுற்றுலா நகரமாகவும் திகழும் காஞ்சிபுரம் தற்போது ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாறிவிட்டது. காஞ்சிபுரத்தில் ரவுடிகளின் அட்டகாசம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடி ஸ்ரீதர் மறைவுக்கு பிறகு, அவரது மைத்துனர் தணிகா மற்றும் ஸ்ரீதரின் கார் டிரைவர் தினேஷ் ஆகியோருக்கு இடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் 2 கோஷ்டிகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.காஞ்சிபுரத்தை கலக்கிய பிரபல ரவுடி ஸ்ரீதரின் வலதுகரமாகச் செயல்பட்டவர்  தினேஷ், ஸ்ரீதரின் இடதுகரமாக செயல்பட்டர் ரவுடி தணிகா. இவர்கள் 2 பேர் மீதும் காஞ்சிபுரம் தாலுகா, பாலு செட்டிச்சத்திரம், சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி மற்றும் பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து உள்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ரவுடி ஸ்ரீதரின் மறைவுக்கு பிறகு தினேஷ் மற்றும் தணிகா ஆகியோருக்கு இடையே நடக்கும் அதிகார போட்டியால் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கொலை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதைத் தொடரந்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சாமுண்டீஸ்வரி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகள் தணிகா, தினேஷ் உள்பட  பலர் கைது செய்யப்பட்டனர். அதில் தினேஷ் மற்றும் தணிகா ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.பின்னர் ஜாமீனில் வெளியேவந்த தணிகா, திடீரென தலைமறைவானார். அவரை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த வேளையில், ரவுடி தணிகா, காசியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் விமானம் மூலமாக காசிக்குச் சென்றனர். அங்கு தணிகா உள்பட 5 பேரை, சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை, ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்த நிலையில், முக்கிய குற்றவாளியான தணிகா தற்போது கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Tags : college student ,Netherlands , Netherlands, college student, parcel, drug pills
× RELATED கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மாயம்