×

சித்தாலப்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வேளச்சேரி: சித்தாலப்பாக்கம் ஏரியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது.  அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சடலமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை யாரேனும் கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசினார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Tags : lake ,Sithalapakkam , Male body ,Sithalapakkam lake
× RELATED ஏரியில் மூழ்கி வாலிபர் பலி