×

கொரோனா வைரஸ் எதிரொலி; இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் போட்டி தொடர் ரத்து

மும்பை: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் போட்டி தொடர் ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியின் முதல் போட்டி தர்மசாலாவில் நடைபெற இருந்த நிலையில், மழையால் கைவிடப்பட்டது. 2வது போட்டி லக்னோவில் நாளை மறுநாள் (மார்ச் 15) நடைபெறுகிறது. அடுத்ததாக கடைசி போட்டி வரும் 18ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதாக  இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் போட்டி தொடர் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Tags : Corona ,ODI ,India ,South Africa ,BCCI , Coronavirus, India, South Africa, BCCI, ODI series canceled
× RELATED கொரோனாவும் கடந்து போகும்!