×

துருக்கியில் எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டியை, தனது உயிரை பற்றி கவலைப்படாமல் காப்பாற்றிய சிறுவன்..! இணையதளத்தில் பாராட்டுகள் குவிகின்றன!

துருக்கி :  தனது உயிரை பெருட்படுத்தாமல் எண்ணைய் கிணற்றில் சிக்கிய நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் ஐந்தறிவு ஜீவன்கள் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருந்தால் ஆறறிவு ஜீவன்கள் உடனே உதவி செய்து காப்பாற்றுவது மனித நேயமாகும். அவை தற்போது மக்களிடையே பெருகி வருகிறது. அந்த வகையில் துருக்கியில் தியார்பகீர் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் எனிஸ் டேய்லன் என்ற 10வயது சிறுவன் சாலையில் சென்று கொண்டிருந்தான். அப்போது நாய்க்குட்டியின் அலறல் சத்தம் கேட்டது.

அப்போது, அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்று முற்றும் பார்த்த சிறுவன், அருகில் ஒரு எண்ணெய் கிணற்றுக்குள் நாய்க்குட்டி சிக்க தவிப்பதை கண்டான். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன், கிணற்றுக்குள் தலைகீழாக தொங்கியபடி நாய்க்குட்டியை காப்பாற்றியுள்ளான். இச்செயலை செய்த 10 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும், அந்த நாய்க்குட்டியை எடுத்து சென்று சுத்தப்படுத்தினான். சிறுவனின் செயல் இணையத்தில் பரவ, இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் ஆர்வலர்கள் ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.


Tags : oil well ,Turkey ,Boy Who Saved a Life Acclaim , Turkey, oil well, puppy, boy, website, compliment
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...