×

பொன்னமராவதி அருகே வைக்கோல் போரில் 12 அடி மலைப்பாம்பு பிடிபட்டது

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே ஏனாதிபிடாரம்பட்டியில் வைக்கோல் போரில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி பிடாரம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி. விவசாயி. இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் மாட்டிற்கு வைக்கோல் அள்ளியபோது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் வந்து மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags : straw war ,Ponnamaravathi ,Ponnamaravathy , Near Ponnamaravati 12 feet in straw war The python was caught
× RELATED பொன்னமராவதி பகுதியில் மணல் கொள்ளை தடுக்க மெகா பள்ளம்