×

வீட்டுக்காவலில் இருந்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா விடுதலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பரூக் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டமான 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். அவர் ஸ்ரீநகரில் கடந்த 7 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ஆகஸ்ட் 5ம் தேதி நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. சிறப்புத்தகுதி ரத்தால் பதற்றம் ஏற்படும் என்பதால் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, முகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் குழப்பம் உருவாகி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக வன்முறை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் முப்தி மற்றும் பரூக் அப்துல்லாவின், அவரின் மகன் ஒமர் அப்துல்லா ஆகியோரை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் வீட்டுக்காவல் பின்னர் தடுப்புக்காவல் என்று வைக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதை தவிர பல்வேறு மனுக்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் பரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : chief minister ,Farooq Abdullah ,Jammu ,Kashmir ,house arrest , Farooq Abdullah
× RELATED சொல்லிட்டாங்க...