×

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அனுமதி இல்லை: மாநில அரசு நடவடிக்கை

டெல்லி: டெல்லியில் ஐ.பி.எல் போட்டிகள் கிடையாது என்று துணை முதல்வர் சிசோடியா அறிவித்துள்ளார். டெல்லியில் கருத்தரங்கு மற்றும் மாநாடுகள் நடத்த கூடாது என்றும் டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து டெல்லி மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் வரும் 29-ம் தேதிமும்பையில் தொடங்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவிட் 19 வைரஸ் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பரவி வருவதை தொடர்ந்து ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.

இதற்கிடையே விளையாட்டு போட்டிகளை காண மைதானங்களுக்கு பெருந்திரளாக மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோவிட் 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளுக்கான விசா வழங்கும் விதிமுறைகளுக்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளில் விளையாடுவதற்காக 60 வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் வரும் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அனுமதியில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags : Delhi ,matches ,IPL ,Corona , Corona
× RELATED கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வழிமுறைகளை வெளியிட்டது ஐசிசி