×

75 பேர் பாதிப்பு, ஒருவர் பலி, 3 பேர் குணமடைவு : இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் முழு விவரத்தை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்


சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக குறைந்து வருகிறது. இருப்பினும் ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகின்றன.இந்தியாவிலும் வைரசால் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. டெல்லி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாகத்தான் இந்தியாவுக்குள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே விமான நிலையங்கள், துறைமுகங்களில் தீவிர மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டாலும், பொது மக்களை நீண்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவும், கண்காணிக்கவும் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன. எனவே இதில் அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

Tags : India , Corona, Virus, Harshavardhan, Minister of Health, India
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!