×

தடுப்பணை கட்டும் பணியை பயன்படுத்தி ஜரூராக நடக்கும் மணல் கொள்ளை

மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை பயன்படுத்தி ஜரூராக நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. நாகை. கடலூர் மாவட்டங்களுக்கிடையே மணல்மேடு அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் ரூ.420 கோடியில் கதவணை கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த அணையால் ஒரு டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும். 3 டிஎம்சி தண்ணீர் நிலத்தடி நீர் சேமிக்க முடியும். இந்த கட்டுமான பணியின் போது, இரவு நேரங்களில் ஆற்று மணல் கொள்ளை ஜரூராக நடந்து வருகிறது. அவற்றை தடுக்க வேண்டும்.

மேலும் கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்வதற்கு நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை சேர்ந்த கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், விவசாயி குணசேகரன் ஆகியோர் அடங்கிய விவசாயிகள் குழு ஒன்று மணல்மேடு, குமாரமங்கலம், ஆதுனூர் தடுப்பணை திட்டப்பணிகளை பார்வையிட்டனர், இரவு பகலாக தடுப்பணைக்கான வேலை துரிதமாக நடைபெற்று வருகிறது. கட்டுமானப்பணியின் போது எடுக்கப்படும் மணல் வேறு இடத்தில் கொட்டி வைக்கப்படுவதாக கூறி அவற்றை இரவு நேரத்தில் வெளியூருக்கு கடத்தி விடுகின்றனர்.

மேலும் தரமான பொருட்களை கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும், இங்கே நடைபெறும் பணிகளை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்படும்போது கதவனை கட்டுமான இடத்திலிருந்து மணல் திருட்டு நடைபெறுவதில்லை என்றும் கொள்ளிடம் ஆற்றின் தென்கரை ஓரத்தில்தான் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுங்கள் கூறப்பட்டது. ஆதனூரில் ஆரம்பித்த ஆய்வு பணி குமாரமங்கலம் வரை சென்று விவசாயிகள் பார்வையிட்டனர்.

Tags : Using the task of constructing the barrier The sand robbery that is going on
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி