×

என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன : ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில்

சென்னை : என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார். சிறுபான்மையினர் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிவித்த முதல்வர் பழனிசாமி, எதிர்கட்சிகள் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் பதட்டமான சூழலை உருவாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கவே மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் பதற்றத்தை தணிக்கவே அமைச்சர் உதயக்குமார் அவைக்கு வெளியே சொன்னதாகவும் முதல்வர் விளக்கம் அளித்தார்.

முன்னதாக இன்று காலை தொடங்கிய தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின் போது,.தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் என்ன என்றும் ஆவணங்கள் எதுவும் கேட்கப்படவில்லை என்றால் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியது ஏன் என்றும் ஸ்டாலின் வினவியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்ததை தொடர்ந்து பேரவையில் காரசார விவாதம் நடந்து வருகிறது.

ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

இதனிடையே மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் குடியுரிமை பதிவேட்டில் குறிப்பிட்ட சில விஷயங்களை நீக்க வேண்டும், இதனால் இஸ்லாமிய மக்கள் அச்சப்படுகின்றனர் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் , மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காத நிலையில் தமிழகத்தில் NPR பதிவை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார்.

Tags : Opposition ,Stalin ,NPR ,Palanisamy ,Islamists ,parties , NPR, Chief Minister, Palaniswami, Minorities, Opposition parties
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...