×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை மூடல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அரண்மனையை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கிளையில் கொரோனா வைரஸ் நோயாளிகள் சிலர் வந்து சென்றதையடுத்து வங்கிக்கிளை 2 நாள் மூடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா, கோட்டயம், கொச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ளனர். இந்நிலையில், பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி நகரில் தொட்டமன் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கிளையில் கொரோனா வைரஸ் நோயாளிகள் சிலர் சமீபத்தில் வந்து சென்றதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த கிளை நேற்று மூடப்பட்டது. இன்றும் அது மூடப்பட்டுள்ளது. வங்கி பணியாளர்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Tags : Kerala ,closure ,Padmanabapuram Palace ,Padmanabhapuram Palace , Padmanabhapuram Palace
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...