×

தி.மலையின் முக்கிய இடங்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் முதல்முறையாக கி.யூ.ஆர் கோடு பொருத்தப்பட்ட பெயர் பலகைகள் அறிமுகம்

தி.மலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களை அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டின் முதல்முறையாக  கி.யூ.ஆர் கோடில் பொருத்தப்பட்ட  பெயர் பலகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடைவரை தூணாண்டார் கோயில், திருமால்பாடி அரங்கநாதர் கோயில், திருமலை சமணர் ஆலயம், தேவிகாபுரம், பெரியநாயகி அம்மன் கோவில், சாத்தனூர் அணை, பரவதம் மலை உள்ளிட்ட 10 இடங்களை பற்றி கி.யூ.ஆர் கோடு பெயர் பலகைகள் மூலம் அறிந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களையும் அறிந்து கொள்ளும் வகையில், மேலும் 20 பெயர் பலகைகள் பொருத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அதிகளவில் உள்ளதாகவும் அவற்றை அறிந்து கொள்ள இந்த கி.யூ.ஆர் கோடு உதவும் என்றும் கூறினார்.மேலும் பல இடங்கள் தொல்லியல் துறை அகழாய்வு செய்யக்கூடிய வகையில் உள்ளதால் அவற்றை எளிதில் அறிந்துகொள்ள இந்த கியூஆர் கோடு உதவும் என்று வரலாற்று ஆய்வு நடுவத்தின் மாவட்டச் செயலாளர் பாலமுருகன் தெரிவித்தார்.

Tags : QR ,Tamil Nadu ,time ,areas ,mountain , Thiruvannamalai, Name Boards, Introduction, QR Line, Diver Tirantar Temple, Tirumalapadi Aranganatha Temple
× RELATED கூகுள் நிறுவனத்தின் சார்பில்...