×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3100, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3100, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3100 புள்ளிகள் சரிந்து 29,686 புள்ளிகளில் வரத்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1000 புள்ளிகள் சரிந்து 8,624 புள்ளிகளானது. நேற்று மும்பை சென்செக்ஸ் 2919 புள்ளிகள் சரிவடைந்த நிலையில் இன்றும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்த நிலையில் பங்குச்சந்தை சரிவு தொடருகிறது. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சரிவும் இந்திய பங்குச்சந்தைகள் சரிய காரணமாக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.48ஆக அதிகரித்து உள்ளது. வரலாறு காணாத வீழ்ச்சியால் பங்கு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டுக்கு பிறகு வீழ்ச்சியால் பங்கு விற்பனைகள் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை. மும்பை, தேசிய பங்குச்சந்தைகள் இரண்டிலும் பங்கு விற்பனை நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குசந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்திய பொருளாதார நெருக்கடி, கொரோனா காரணமாக பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.74.48ஆக அதிகரித்து உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த ஒரு வாரத்தில் 8000 புள்ளிகள் சரிந்தது. கடந்த மார்ச் 6ம் தேதி 37,577ல் முடிந்த மும்பை பங்குச்சந்தை 8000 புள்ளிகள் சரிந்து இன்று காலை 28,687ல் வர்த்தகமாகிறது.

Tags : Mumbai Stock Exchange Sensex ,NSE Nifty , Stock Exchange
× RELATED வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு