×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3,100, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3,100, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. நேற்று மும்பை சென்செக்ஸ் 2919 புள்ளிகள் சரிவடைந்த நிலையில் இன்றும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்த நிலையில் பங்குச்சந்தை சரிவு தொடருகிறது. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சரிவும் இந்திய பங்குச்சந்தைகள் சரிய காரணமாக உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3,100 புள்ளிகள் சரிந்து 29,686 புள்ளிகளில் வரத்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1000 புள்ளிகள் சரிந்து 8,624 புள்ளிகளானது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.48ஆக அதிகரித்து உள்ளது.

Tags : Bombay Stock Exchange ,Sensex ,National Stock Exchange Nifty , Stock
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...