×

ரசிகர்கள் கூடினால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்: ஐபிஎல் போட்டிக்கு தடைகோரி வழக்கு: பிசிசிஐ பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உலகம் முழுவதும் பரவி வரும்  கொரோனா வைரஸ் தமிழகத்திலும்  பாதிப்பை ஏற்பட்டுத்தி உள்ள நிலையில், மார்ச் 29ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் பென்சைகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.இதனால் 150 ஆண்டுகால பழமையான இத்தாலி கால்பந்து லீக் போட்டிகள் உட்பட 10க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.எனவே, மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளது.

இந்த போட்டிகளை காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் கூடுவார்கள் என்பதால் இந்த போட்டிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐபிஎல் போட்டி நடக்கும்போது கொரோனா வைரஸ் வராமல் தடுப்பது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags : Coronavirus virus spread ,Fans ,match ban Fans ,IPL ,Corona ,HC ,BCCI , Fans, Corona Virus, BCCI, iCord
× RELATED தென்கொரியாவைக் கலக்கும் 80வயது...