×

மாநில திட்டக்குழு துணை தலைவராக பொன்னையன் பதவியேற்பு

சென்னை: மாநில திட்டக் குழுவின் துணை தலைவராக சி.பொன்னையன், கடந்த 9ம் தேதி நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
அரசு கூடுதல் தலைமை செயலர், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலர், நிதித்துறை ஆகியோர் இக்குழுவின் அலுவல்சார் உறுப்பினர்களாவர். மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் இந்த குழுவின் நிர்வாக பொறுப்பு வகிக்கிறார். மாநில திட்டக்குழுவின் நிர்வாக கட்டுப்பாடு துறையாக திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Ponnayan ,Deputy Chairman State Planning Committee Deputy Chairman ,State Planning Committee , State Planning Committee Vice President, Ponnayan, sworn in
× RELATED திருவையாறில் அரசு திட்டப்பணிகள் மாநில திட்டக்குழு துணைத் தலைவா் ஆய்வு