×

ஈராக்கில் ராக்கெட் தாக்குதல் 4 வீரர்கள் பலி

பாக்தாத்: ஈராக்கில் உள்ள விமான தளத்தை குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாக்தாத்தில் உள்ள தாஜி விமான தளத்தின் மீது சுமார் 18 ராக்கெட்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க வீரர்கள் 2 பேர், இங்கிலாந்து வீரர் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். டிரக்கின் பின்புறத்தில் இருந்து ராக்கெட்டுக்கள் ஏவப்பட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் டோமினிக் ராப் ஆகியோர் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு காரணமானர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனிடையே தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக ஈராக் எல்லையையொட்டி உள்ள சிரியா பகுதியின் மீது 3 போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.


Tags : soldiers ,rocket attack ,Iraq , Iraq, rocket attack, 4 soldiers, kills
× RELATED 40 வீரர்களை பலி கொண்ட புல்வாமா...