×

ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் இல்லை

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டினர், இந்தியா வர வழங்கப்பட்ட விசா  ஏப்.15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால்  ஐபிஎல் டி20 போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ‘ஏப்.15ம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்’ என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் பிசினஸ் ஸ்போர்ட்ஸ் விசாவில் வெளிநாட்டு வீரர்களை வரவழைக்கும் முயற்சியும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்களா?  போட்டிகளின் போது ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என பல்வேறு கேள்விகளுக்கு நாளை மும்பையில் நடைபெற உள்ள ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் பதில்கள் கிடைக்கும்.

Tags : IPL ,rivalry , IPL rivalry, foreign players, no
× RELATED நிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்