×

ஒரு பங்கு ரூ10 வீதம் ரூ7,250 கோடி மதிப்பிலான யெஸ் வங்கி பங்குகளை வாங்குகிறது எஸ்பிஐ

புதுடெல்லி: யெஸ் வங்கியில் ரூ7,250 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்க உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கி கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானது. மூலதன நிதி திரட்டும் முயற்சிகளும் பலன் தரவில்லை. இதை தொடர்ந்து இந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. வாடிக்கையாளர்கள் ரூ50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. இதன்படி, செபியிடம் பாரத ஸ்டேட் வங்கி நேற்று அளித்துள்ள தகவலின்படி, விதிமுறைகளின்படி, யெஸ் வங்கியில் 49 சதவீதத்துக்கு உட்பட்ட பங்குகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு பங்கு மதிப்பு ரூ10 வீதம் 725 கோடி  பங்குகளை ரூ7,250 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 11ம் தேதி நடந்த வங்கியின் மத்திய வாரிய கூட்டத்தில், யெஸ் வங்கியின் 725 கோடி பங்குகளை வாங்க அனுமதி பெறப்பட்டுள்ளது என கூறப்பட்டுளளது. பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னீஷ் குமார் கடந்த வாரம் நிருபர்களிடம் கூறுகையில், யெஸ் வங்கியை மீட்க 245 கோடி பங்குகளை ரூ2.450 கோடி முதலீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், அதை விட அதிகமாகவே முதலீடு செய்ய இந்த வங்கி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : SBI ,YES Bank , Yes Bank, Stock, SBI
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...