×

திமுக எம்எல்ஏ கேள்வியால் அமைச்சர் டென்ஷன்

சென்னை: சட்டப் பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது திமுக  உறுப்பினர் ஆற்காடு ஈஸ்வரப்பா பாடப்புத்தகங்களை  பேரவைக்கு எடுத்து வந்து அதை காட்டி கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்.  ஒரு கட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பொறுமை இழந்தார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பதிலளித்தார். ஆற்காடு, ஈஸ்வரப்பா (திமுக): மாணவர்கள் கல்வி என்பது தமிழகத்தில் தரமாக இல்லை. கல்வி தரத்தில் தமிழகம் 23வது இடத்தில் உள்ளது.  மருத்துவ படிப்பு ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன்: பிளஸ் 2 பாடத்திட்டத்தை படித்தால் இந்தியாவில் நடத்தப்படும் எந்த போட்டித் தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ள  முடியும். பிளஸ் 2 தேர்வு முடிந்த பிறகு 7500 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படும்.  

ஈஸ்வரப்பா: பிளஸ் 2 வகுப்புக்கான கணக்கு புத்தகம்  147 பக்கம் கொண்ட தொகுதி 1,  109 பக்கம் கொண்ட தொகுதி 2 என இரண்டு புத்தகமாக  அச்சிடப்பட்டுள்ளது. அதில் உள்ள பாடங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் ஆசிரியர்களால் நடத்த முடியாது. அதற்கு அதிக அளவில் பாட வேளை  ஒதுக்க வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: உறுப்பினர் கூறிய கருத்தை நான் ஏற்கிறேன். பாடங்கள் தெளிவாக கொடுக்க வேண்டும் என்பதால் அதிகமாகிவிட்டது.  அதை குறைத்து அடுத்த ஆண்டில் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். ஈஸ்வரப்பா: கடினமான பாடப்பகுதி இருப்பதால் முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு பிறகு பாடங்களை கொண்டு வந்திருக்க வேண்டும்.  அதில் உள்ள குறியீடுகள் மாணவர்களுக்கு புரியவில்லை. கிராம மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

பிளஸ் 2 வகுப்பில் படிக்கும்  மாணவர்களிடம் பாடம் தொடர்பாக கேள்வி கேட்டால் அவர்களுக்கு தெரியவில்லை. பள்ளிக் கல்வித்துறையி–்ல் ஏதாவது குறை கூற வேண்டும்  என்ற அடிப்படையில் நீங்கள் இப்படி குறை கூறிக் கொண்டு போகிறீர்கள். ஈஸ்வரப்பா: கடந்த 9 ஆண்டுகளாக கல்வியின் தரம் சரியில்லை.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: கல்வியின் தரம் குறையவில்லை. சிறப்பாக இருக்கிறது. அதை இன்னும் சிறப்பாக மாற்ற நீங்கள் ஒத்துழைக்க  வேண்டும்.  


Tags : DMK ,MLA , Minister, Tension ,DMK MLA, question
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...