×

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

சென்னை: அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி  அளித்துள்ளார். சட்டசபையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் விளவங்கோடு தொகுதி விஜயதரணி (காங்கிரஸ்)  பேசியதாவது: பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகம் பொதுப்பணித்துறையின் மூலம் உரிய மதிப்பீடு செய்து, பணிகளை மேற்கொள்ள  நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன் : நபார்டு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை தவிர்த்து தனியார் நிறுவனங்களின்  உதவி பெற்று ரூ.482 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விஜயதரணி : கடந்த 2017ல் உடற்கல்வி ஆசிரியர் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் குளறுபடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் பேரில் உடற்கல்வி  ஆசிரியர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், உடற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில் நியமனத்துக்காக காத்துக்  கொண்டிருக்கின்றனர்.செங்கோட்டையன்: உடற்கல்வி ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக ஒரு சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால், உடற்கல்வி ஆசிரியர் நியமனம்  நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கு போட்ட 23 இடங்களின் நியமனம் நிறுத்தி வைத்து விட்டு, மற்றவர்களை பணியமர்த்தலாம் என்று அரசு பரிசீலித்து  வருகிறது.


Tags : teachers ,government schools , Physical teachers, appointed , government schools
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...