×

ராஜபாளையம் அருகே துப்பாக்கி வீரன் சிற்பத்துடன் கூடிய நடுகற்கள் கண்டுபிடிப்பு: 17ம் நூற்றாண்டை சேர்ந்தவை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த துப்பாக்கியுடன் உள்ள வீரனின் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பின்புறம் மற்றும் தென்காசி சாலையில் சேத்தூர்  எல்லைப்பகுதி ரோட்டோரத்தில் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளரும், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின்  வரலாற்றுத்துறை உதவி பேராசிரியருமான கந்தசாமி கூறியதாவது:சேத்தூர் எல்லையில் காமராஜர் நகர் அருகே  உள்ள நடுகல்லில், வீரன் நின்றவாறு நாட்டுத்துப்பாக்கியை இடுப்புக் கயிற்றில் கட்டிய நிலையிலும்,  இடது கையால் சற்று உயர தூக்கி பிடித்துக் கொண்டவாறும் சிற்பம் அமைந்துள்ளது. இரண்டு நடுகற்களிலும் வீரன் நாட்டுத்துப்பாக்கியுடன்  காணப்படுவதால் விலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களை காப்பதற்காகவும், காட்டு விலங்குகளை வேட்டையாடி வீரம் புரிந்த நிகழ்வுகளை  இந்நடுகல் சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இவை கி.பி. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : sculptor ,Rajapalayam ,Near Rajapalayam , Rajapalayam,gunman sculpture, 17th century
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்