×

ஈரானில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு இந்திய யாத்திரீகர்களை அழைத்து வர நடவடிக்கை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி:  வெளியுறவு  அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கூறியதாவது:  ஈரானில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு 6,000 இந்தியர்கள் பீதியில் உள்ளனர். இதில் 300 மாணவர்கள்,  மகாராஷ்டிரா மற்றும் காஷ்மீரை சேர்ந்த 1100 யாத்திரீகர்களும் அடங்குவர். ஈரானின்  குவாம் பகுதியில் சிக்கி தவிக்கும் இந்திய யாத்திரீகர்களை மீட்பதில் வெளியுறவுத் துறை முதல் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே, அங்கிருந்து 58 இந்தியர்கள் மீட்டு வரப்பட்டுள்ளனர். மற்றவர்களை அழைத்து வர, வெளியுறவு அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்குள்ள இந்தியர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டதும் உடனடியாக நாடு திரும்ப. வர்த்தக விமானங்களை இயக்கப்படும்.

 இதேபோல், ஆயிரம் இந்திய மீனவர்களும் அங்கு சிக்கி தவிக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் கொரோனா பாதித்த பகுதியில் இல்லை. உலகம் முழுவதும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர்கள் உலகின் பல நாடுகளில் வசிப்பதால் கொரோனா பாதிப்பு கவலை அளிக்கிறது. இவர்கள் மூலம் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, விமானம், கப்பல், தரைவழியே நாட்டுக்குள் நுழையும் நுழைவு வாயில்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Jaishankar ,surge ,Coroner ,Iran ,pilgrims ,Indian , Corona ,vulnerability, Indian pilgrims,Foreign Minister, Jaishankar
× RELATED ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை: காவல்துறை விளக்கம்