×

என்பிஆர் ஆவணம் மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: ‘‘தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பில் மக்களிடம் எந்த ஆவணமும் கேட்கப்படாது’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அமித்ஷா கூறுகையில், ‘‘தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) தயாரிப்பின்போது மக்கள் எந்த ஆவணமும் அளிக்க தேவையில்லை. அதுபற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. யாரும் தகவல்களை வழங்க விரும்பவில்லை என்றால், எந்த கேள்வியும் கேட்கப்பட மாட்டாது’’ என்றார்.



Tags : NPR Document Central Government , NPR Document, Central Government ,Explanation
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது...